Advertisment

நண்பனை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்... 6 பேர் கைது...

gold

Advertisment

திருட்டு நகையை பிரிப்பதில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு ஏற்பட்டு, கொலையில் முடிந்தது. நண்பனை கொன்று கிணற்றில் வீசிய ஆறுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் விவசாய கிணற்றில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில், ஒரு சடலம் கிடந்துள்ளது. இதுபற்றி அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதற்காக மூன்று தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

சடலமாக கிடந்த நபர் சோமளூரைச் சேர்ந்த தீனா என தெரிய வந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். வாகன சோதனையின்போது ஆறுபேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கூட்டாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்தது. மேலும் கொள்ளையடித்த நகைகளை பிரிக்கும்போது வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் நடந்தது. இதில் தீனாவைக் கொன்றதாக, அவர்கள் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

friends gold incident Robbery
இதையும் படியுங்கள்
Subscribe