Advertisment

அரக்கோணம் பாலியல் சம்பவம்- ஆர்ப்பாட்டத்தை அறிவித்த இபிஎஸ்

Arakkonam incident - EPS protest announcement

அரக்கோணத்தில்திமுக நிர்வாகிஒருவர் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல் விடுவதாக பெண்கள் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வச்செயல். காவனூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். சும்மா இருபது வயசு பெண்கள் டார்கெட் பண்ணி லவ் டார்ச்சர் கொடுத்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் அவருடைய குறிக்கோள். ஐந்து வருடத்திற்கு ஒவ்வொரு 20 வயது பெண்களை தேடித் தேடி காதலித்து டார்ச்சர் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது. என்னை சுற்றி வழக்கு ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதைத் தெரிந்து கொண்டு வழக்கறிஞர் என சொல்லி என்னிடம் வந்து டார்ச்சர் செய்தார். திமுக கட்சியில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டினார். எனக்கு யாருடைய சப்போர்ட்டும் கிடையாது. அப்பா அம்மா மட்டும்தான் எனக்கு சப்போர்ட். வேற யாருமே கிடையாது என தெரிந்துகொண்டு உள்ளே வந்து டெய்லியும் டார்ச்சர் செய்து கட்டாயமாக கல்யாணம் செய்தார். இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் துண்டு துண்டாக வெட்டிடுவேன். வரும் வழியிலேயே உன்னை காரை ஏற்றி கொலை செய்து விடுவேன். என்கிட்ட கார் இருக்கு என என்னென்னமோ பேசி மிரட்டினார். எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கிறது'' என்றார்.

Advertisment

Arakkonam incident - EPS protest announcement

அதேபோல் மற்றொரு பெண் அதிமுக நிர்வாகிகளிடம் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். ''ஆமாம் நான் தப்பு செய்தேன் தான். ரிமாண்ட் பண்ணுங்க என சிரிச்சுகிட்டே சொல்றான் சார். என் வாழ்க்கையே போயிருச்சு. உடம்ப நாஸ்தி பண்ணிட்டான். படிப்பும் போயி இங்கு நிக்கிறேன். நீங்கதான் எங்களுக்கு நீதி வாங்கி தரணும். என்னிடம் மட்டுமல்ல 15 பெண்களிடம் இதுபோன்ற குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். இந்த பொண்ணுங்கள எல்லாம் அக்கா தங்கச்சியா நெனச்சு நீங்காத காப்பாத்தி தரணும்'' வேதனையில் மன்றாடினர்.

nn

இந்நிலையில் திமுக நிர்வாகியால் கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் 21 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் அரசுக்கு கண்டனம். வரும் மே 21ஆம் தேதி என்று அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெறும். நிர்வாக திறனற்ற தமிழக அரசைகண்டித்து நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர்பங்கேற்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

police arakkonam edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe