Advertisment

ஏ.ஆர்.ரஹ்மான் குழந்தைகளுடன் தர்காவுக்கு ரகசிய வருகை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தரோஜா படத்தின் பாடல்கள் ஹிட்டானது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதனால் அதன் பிறகு ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யும் போதும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவுக்கு வருவதும், பாடல்கள், படம் வெளியாகும் போதும் தர்காவிற்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்வதும் வழக்கமாக கொண்டிருந்தார்.

Advertisment

ar

 AR Rahman Secret visit to Dargah

வருடத்திற்கு 2 அல்லது 3 முறை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்கா வந்து செல்வார். அவரது பயணம் ரகசியமாகவே இருக்கும். ஆனால் அவரது மனைவி மற்றும் அம்மா வருடத்திற்கு பலமுறை வந்து செல்வார்கள். இந்தநிலையில் தான் இன்று காலை திடீரென தனது மகன், மகளுடன் தர்காவிற்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தார். திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் வந்த தகவல் அறிந்து தர்கா நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் திரண்டு வந்தனர். மரியாதைகளும் செய்யப்பட்டது. சுமார் அரை மணி நேரம் தனியாக இருந்து பிரார்தனை செய்தார்.

Advertisment

 AR Rahman Secret visit to Dargah

ar

தொடர்ந்து அருகில் உள்ள இன்னும் பிற தர்காகளுக்கும் நடந்து சென்று பிரார்த்தனை செய்தவர் அங்குள் தர்கா நிர்வாகி ஜெக்கரிய சாகிப் வீட்டிற்கு சென்றவர் சிறிது நேரத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றார்.ஏ.ஆர்.ரஹ்மானின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Thiruvarur visit ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe