A.R. Rahman returns home safely

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்தது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக இன்றுமருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியாகலாம். அதன் பின்னரே முழு தகவல் வெளிவரும் எனவும் கூறப்பட்டது.

தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'இசைப்புயல் ஏ.ஆர்ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!' என தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நலமுடன்வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.