Skip to main content

குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
kurankani

 

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

 குரங்கணி தீ விபத்தில் சிக்கி மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில்  ஏற்கனவே சம்பவ இடத்திலேயே 9 பேர் இறந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காததால் 5 பேர் ஆக மொத்தம் 14  பேர் இறந்துள்ளனர். 


     இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைசேர்ந்த சக்தி கலா மற்றும் சேலம்  எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகியோர் இறந்ததின் மூலம்  குரங்கணி கொழுக்கு மலை தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைகிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

உலக அளவில் விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

 

India has the highest number of accident deaths in the world!

 

உலக அளவில் விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

உலகளவில் ஒப்பிடும் போது, சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியாவின் நிலை என்ன? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ஜெனிவாவில் உள்ள 'சர்வதேச சாலை கூட்டமைப்பு' வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

 

சாலை விபத்துகளின் போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கையின் படி, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

நாடு முழுவதும் கடந்த 2020- ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 69.80% பேர் 18 முதல் 45 வயதுடையோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Next Story

திகிலை நோக்கி சென்னை மண்டலம்!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
chennai

 

முழு ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிக அளவிலான தளர்வால், சென்னை மண்டலம் பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்றின் வேகம் மட்டுப்பட தொடங்கிவிட்டது என்று சொல்லும் அரசு, அதேநேரம் 6-ந் தேதி முதல் பெரும் தளர்வுகளையும் அறிவித்தது. 

 

ஆனால் சென்னையின் கரோனா மரண எண்ணிக்கை குறைவதற்கு முன்பாகவே, இங்குள்ள தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நூறு சதவித தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்றும் அது பச்சைக்கொடி காட்டியது. பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில் இப்படி அரசு காட்டிய பச்சைக்கொடியால் சென்னை, அம்பத்தூர், பாடி, கிண்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகள் அனைத்தும் முழு வேகமெடுத்து இயங்க தொடங்கிவிட்டன. 

 

போக்குவரத்து வசதியில்லாமல் தவித்த தொழிலாளர்களிடம் “வேலைக்கு வந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம்” என்று அந்த நிறுவனங்கள் கறாராய் மிரட்டத்தொடங்கியதால், கிடைத்த வாகனங்களில்  ஒருவருக்கு மேற்பட்டோர் அடித்து பிடித்து பயணித்து வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் சென்னை மாநகர சாலைகள் முழுக்க நெரிசலில் திணற தொடங்கிவிட்டது. 

 

தொழில் நிறுவனங்களின் நிர்பந்தத்தால் வேலைக்கு சென்றுவரும் தொழிலாளர்கள் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கும் தொற்று பரவும் ஆபத்து மிகுந்திருக்கிறது. இப்போது யார் மூலம் யாருக்கெல்லாம் கரோனா தொற்று பரவுமோ என்ற திகிலோடு தொழிலாளர்கள் வேலைக்கு போய்வருகிறார்கள். 

 

ddd

 

தொழிற்சாலைகள் இயங்கினால் கரோனா பரவுமா? என்று கேட்கலாம். நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது கலெக்டர் இன்னோசென்ட் திவ்யா தலைமையிலான மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில், ஊட்டி அருகே இருக்கும் எல்லநல்லி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரியும் கோவையை சேர்ந்த பி.ஆர்.ஓ..வுக்கு தொற்று ஏற்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 

ccc

 

அவரால் அவர் வேலை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் ஏறத்தாழ 100 பேருக்கு கரோனா பரவியது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலை ஊழியர்கள் மூலம் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களால் இந்த தொற்றின் எண்ணிக்கை 155ஐ கடந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அங்கே திகில் சூழ்ந்திருக்கிறது.

 

admk ministers

 

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடமாடிய தமிழக அமைச்சர்களான கே.பி.அன்பழகனும், தங்கமணியுமே தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாத  தொழிலாளர்கள், பீதியோடு வேலைக்குப் போய்வருகிறார்கள். அரசின் தளர்வுகளால் தொற்று ஆபத்தை நோக்கித்தான் சென்னை மண்டலம் சென்று கொண்டிருக்கிறது.