
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் அனைத்து அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் இருந்தால் அகற்றி, அதனை உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பொதுஇடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், உள்ளாட்சி பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் கொடிக்கம்பங்களை இன்றிலிருந்து 12 வார காலங்களில் அகற்றும்படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தவறும் பட்சத்தில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளித்து இரண்டு வார காலத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். அதேபோல் தனியார் நிலங்களில் கொடிக் கம்பங்களை வைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தலைமைச்செயலாளர் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பான அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பத்தை அகற்றுவதற்கான கால நிர்ணயத்தை நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற ஏப்ரல் 28ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்ததோடு, உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)