திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், தூய்மைப் பணியாளர்களுக்கான அனைத்து குறைகளை கேட்டறிதல் மற்றும் அவர்களுக்கான சட்டப்படியான உரிமைகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்தான ஆய்வுக் கூட்டம் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம், கோரிக்கைகள், தேவையான அடிப்படை வசதிகள், குறைகள், சட்டப்படியான உரிமைகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் தூய்மைப்பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார்.
தூய்மைப் பணியாளர்களிடம் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த ஆணையத்தின் தலைவர், கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.முத்தரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.