Approaching vote count; Appointment of Additional Election Observers in Tamil Nadu

Advertisment

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடியவுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை தேதி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளமொத்தம்39 தொகுதிகளுக்கும் மொத்தமாக 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகள் உட்பட 16 தொகுதிகளுக்கு தலா இரண்டு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் மூன்று பார்வையாளர்கள் என நியமித்துத்தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படியாகத்தமிழகம் முழுவதும் மொத்தமாக 57 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.