Advertisment

கேட்பாரற்று கிடந்த சடலங்களை மீட்டு நல்லடக்கம்; கவுன்சிலர், ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு!

Appreciation for the councilor and staff thier Recover and dispose of the unclaimed men

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரப் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள நிழல் கூடையில் அடுத்தடுத்து இரண்டு நபர்கள் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த இரண்டு சடலங்களையும் மீட்டு அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் ஒருவர் செல்வராஜ் எனவும் மற்றொருவர் பாலாஜி என்பதும் தெரியவந்தது.

Advertisment

இவர்கள் இருவரும் ஆதரவற்றவர்கள் எனவும் இவர்களுக்கு உற்றார், உறவினர்கள் யாரும் இல்லை என்பதும் தெரியவந்தது. இவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் சங்கராபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி துரைதாகப்பிள்ளை மற்றும் ஆறாவது வார்டு கவுன்சிலர் பரிதா சக்தியிடம் சடலங்களைகாவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Advertisment

Appreciation for the councilor and staff thier Recover and dispose of the unclaimed men

சடலங்களைப் பெற்றுக் கொண்ட பேரூராட்சி கவுன்சிலர் பரிதாசக்தி பேரூராட்சி தூய்மை பணியாளர்களின் உதவியோடு இரண்டு சடலத்தையும் எடுத்துச் சென்று அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த செயலை செய்த ஆறாவது வார்டு கவுன்சிலர் பரிதா சக்திக்கும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் வியாபாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

staff councilor kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe