nn

திருச்சியில் நடைபெற்ற சாரண, சாரணியர் வைரவிழாவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிதம்பரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

Advertisment

திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி முதல் பிப் 3-ந்தேதி வரை 75 ஆம் ஆண்டு சாரணர் மற்றும் சாரணியர்கள் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருதிறலணி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்திலே அதிகளவில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 32 சாரண சாரணியர்கள், 3 சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

இவர்கள் இதில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றனர். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் வீனஸ் கல்வி குழுமப் பள்ளிகளின் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை தாங்கி மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை தேவைகளையும், பாதுகாப்பையும் எந்த குறையும் இன்றி செய்து கொடுத்த பாரத சாரண சாரணிய இயக்கத்திற்கும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் வீனஸ் கல்விக் குழுமங்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொண்டார். மெட்ரிக் பள்ளியின் துணை தாளாளர் ரூபியாள்ராணி, முதல்வர் நரேந்திரன் முன்னிலை வகித்தனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாரண சாரணியர்கள் திருச்சியில் 7 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து அவர்களின் அனுபவங்களை அனைத்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சாரண, சாரணிய ஆசிரியர்கள் பிரவீனா, ஹரிஹரன், சண்முகம் ஆகியோர் செய்து இருந்தனர். சாரணிய ஆசிரியை ஜெயந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.