Advertisment

டிஎஸ்பி அலுவலகத்தில் ஊர்க்காவல் படை சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா..!

dsp office appreciation ceremony

Advertisment

சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில், ஆதிபராசக்தி விழாக்குழு சார்பில் முதற்கட்டமாக சிதம்பரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பாக பணியாற்றும் 11 ஊர்க்காவல் படையினரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஊர்க்காவல்படை கமாண்டர் வேதரத்தினம் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சிதம்பரம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் லாமேக் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு இணையான ஊர்க்காவல் படையினரின் பணிகளைப் பாராட்டி சால்வை அனிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். முன்னதாக பேராசிரியர் ஞானக்குமார், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். அரசு சித்த மருத்துவர் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். இதில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பாலமுருகன், திருநாவுக்கரசு, அன்புநாதன், கண்ணையன், கார்த்திகேயன், இராமநாதன், பரணிராஜா, சுரேஷ்குமார், பழனிராஜா, வேதரத்தினம், கார்த்திக்ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

Chidambaram DSP Home guards
இதையும் படியுங்கள்
Subscribe