தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
அரசாணையில், 'தேர்வு முடிந்து பணி நியமனம் செய்ய சில மாதங்களாகும் என்பதால், ஒப்பந்த அடிப்படையில் 754 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,141 கால்நடை உதவி மருத்துவர்களுக்கானபணியிடங்கள் காலியாக உள்ளன. 1,141 கால்நடை உதவி மருத்துவர்களைத் தேர்வு செய்யும் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறுகிறது. மாதம் ரூபாய் 40,000 வீதம் 11 மாதங்களுக்குப் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் 754 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.