
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், மிதமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என கண்டறிந்துள்ளனர்.
பின்னர், அவற்றில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள நபர்களுக்கு வெப்ப பரிசோதனை மற்றும் ஆக்ஸிஜன் அளவினைக் கண்டறியும் பரிசோதனையினை மேற்கொள்ள 795 பணியாளர்களும் 50 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேற்படி பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு 100 வீடுகளுக்கு குறையாமல் காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணிவரை ஒவ்வொரு வீடாகச் சென்று பரிசோதனையினை மேற்கொண்டுவருகின்றனர்.
இப்பரிசோதனையின்போது எவருக்கேனும் ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் கீழாகவோ அல்லது வெப்பநிலை 37C/98F என்ற அளவைவிட அதிகமாகவோ இருந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் பாரசிட்டமல், வைட்டமின்-சி, ஜிங்க், கபசுரக் குடிநீர் தயாரிக்கும் பாக்கெட், முகக்கவசம் ஆகியவை அடங்கிய மருத்துவ தொகுப்பு பெட்டகம் ஒன்று வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)