தமிழ்நாடு காவல்துறைக்கு புதியதாக தேர்வான இரண்டாம் நிலை காவலர் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020-ஆம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணையிணை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகரில் 20 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 21 நபர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணையை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் வழங்கினார்.