Advertisment

டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Appointment of new members to TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது.இந்த தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற சட்ட விதிப்படி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அதன்படி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆர். சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டி பாபு தெருவைச் சேர்ந்த உஷா, கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ஆர். பிரேம்குமார் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பைத்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

appointment member tnpsc
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe