
தென்மண்டல பசுமை தீர்ப்பாயநிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 19ஆம் தேதி பதவியேற்க இருந்த நிலையில், அவரது நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
‘சுற்றுச்சூழல்சார்ந்த நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன். எனவே அவரை அந்தப் பொறுப்பில் நியமிக்க தடை விதிக்க வேண்டும்’ என பூவுலகின் நண்பர்கள்அமைப்புசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், கிரிஜா வைத்தியநாதன்பசுமை தீர்ப்பாயநிபுணத்துவ உறுப்பினராக பதவியேற்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow Us