Appointment of the Chief Justice responsible for the High Court

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 65 நீதிபதிகள் என மொத்தம் 66 நீதிபதிகள் பணியாற்றி வந்தனர். இத்தகைய சூழலில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா கடந்த மே 23 ஆம் தேதியுடன் (23.05.2024) பணி ஓய்வு பெற்றார்.

Advertisment

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது.

Advertisment

அதில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வரும் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.