Apply for medical courses starting today!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Advertisment

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 6,958 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1,925 பல் மருத்துவ இடங்கள் என மொத்தம் உள்ள 8,853 இடங்களுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 7 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கையெழுத்திடப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள்வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment