Advertisment

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

Apply to join undergraduate medical courses!

தமிழ்நாட்டில் நடப்பு 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதையடுத்து, பிஎஸ்சி நர்சிங், செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு, பிபிடி, பிஎஸ்இ ரேடியோகிராஃபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மனரி பர்பியூஷன் டெக்னாலஜி,பிஎஸ்சி மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜி, ரெஸ்பரேட்டரிதெரபி, பிஓடி, பி.ஆப்டம், பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, பிஎஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன் ஆகிய துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

மாணவர்கள் விரும்பும் துறைகளில் சேர உரிய விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு, அதை அச்சுப்படி எடுத்து அனுப்ப வேண்டும்.

Advertisment

விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேடுகளை www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையதளம் வாயிலாக அக். 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைப் பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் 8ஆம் தேதி ஆகும். அதேபோல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 10ஆம் தேதி ஆகும். இவ்வாறு தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

medical college students Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe