/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/temple_6.jpg)
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 27ஆம் தேதி ஆகும். தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூபாய் 3,000 உதவித்தொகை வழங்கப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சமய தீட்சைபெற்றவர்கள், சமயக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)