கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Applications are welcome for Computer Tamil Award

2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர்மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் மற்றும் செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் கடந்த 2020, 2021, மற்றும்2022 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்றவலைத்தளத்திலோ, http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 என்ற தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (31.12.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application apps Award
இதையும் படியுங்கள்
Subscribe