Advertisment

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சிஇஓ பதவிக்கு விண்ணப்பம்

Application for the post of CEO of Tamil Nadu Mercantile Bank

Advertisment

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வங்கிக் கணக்கில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்திருந்தது நிதியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் காலியாக உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பணியிடத்தை நிரப்ப அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பதவிக்கு தகுதியுள்ளவர்கள் www.tmbnet.in./tmbcareers என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஆகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application bank ceo tmb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe