எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கிறது. தமிழகத்திலுள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடத்திற்கான விண்ணப்ப கட்டணம்500 ரூபாயும், தனியார் நிர்வாக இடங்களுக்குக்கு விண்ணப்ப கட்டணம் 1000 ரூபாயும் டி.டி.யாகசெலுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது.
இன்று காலை பத்து மணிமுதல் வரும் 18-ஆம் தேதி மாலை ஐந்து மணிவரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனவும்விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 19 தேதி மாலை 5 மணிவரை காலம் அவகாசம்ஒத்துப்பட்டுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களைwww.tnheatlth.orgமற்றும்www.tnmedicalselection.orgஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நிரப்பி டி.டி.யுடன் செயலாளர், தேர்வு குழு, மருத்துவ கல்வி இயக்ககம்,162, பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை,கீழ்பாக்கம், சென்னை-600010என்ற முகவரியில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.