Skip to main content

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கிறது. தமிழகத்திலுள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடத்திற்கான விண்ணப்ப கட்டணம் 500 ரூபாயும், தனியார் நிர்வாக இடங்களுக்குக்கு விண்ணப்ப கட்டணம் 1000 ரூபாயும் டி.டி.யாக செலுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது.

 

tn

 

இன்று காலை பத்து மணிமுதல் வரும் 18-ஆம் தேதி மாலை ஐந்து மணிவரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனவும் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 19 தேதி மாலை 5 மணிவரை காலம் அவகாசம் ஒத்துப்பட்டுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை www.tnheatlth.org மற்றும்  www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நிரப்பி டி.டி.யுடன் செயலாளர், தேர்வு குழு, மருத்துவ கல்வி இயக்ககம்,162, பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை,கீழ்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரியில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவ கலந்தாய்வு; புதுக்கோட்டையில் 19 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

19 students got places to study medicine in Pudukottai

 

தமிழ்நாடு அரசின் 7.5% அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான கந்தாய்வு இன்று காலை தொடங்கிய நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 50 மாணவ, மாணவிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.

 

இதில் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 18 பேருக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கும் ஒரு மாணவிக்கு பிடிஎஸ் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது.

 

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுருதி, ஜனனி, சுபதாரணி ஆகிய 3 பேரும், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஹரிராஜ், ஜெகதீஸ்வரன் ஆகிய 2 பேரும், அதே ஊரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ராஜேஸ்வரி, நிவேதா ஆகிய இருவரும், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  பாலகிருஷ்ணன், மனோஜ், பரம்பூர் பிரவீன், வெண்ணாவல்குடி நந்தகுமாரன், கந்தர்வக்கோட்டை பவித்ரா, சூரியூர் பிரகாஷ், தாஞ்சூர் மகேஸ்வரன், ராப்பூசல் காயத்திரி, விராலிமலை அறிவுநிதி, அரிமளம் ரெத்தினவேல், கல்லாக்கோட்டை யுவதிகா என 18 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொண்டு எம்பிபிஎஸ் படிக்கவும் சந்தைப்பேட்டை மாணவி செல்லமுத்து பிடிஎஸ் படிக்கவும் என 19 மாணவ மாணவிகளும் பல்வேறு கல்லூரிகளை தேர்வு செய்து பெற்றுள்ளனர்.

 

இந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட குறைந்துள்ளது அதாவது 7.5% உள் இட ஒதுக்கீடு வந்த முதல் ஆண்டில் 18 மாணவ, மாணவிகளும், அடுத்த ஆண்டில் 38 மாணவ, மாணவிகளும் தேர்வாகி மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு 18 மாணவ, மாணவிகள் மட்டுமே மருத்துவம் படிக்கத் தேர்வானார்கள் ஆனால் இந்த ஆண்டு 19 பேர் தேர்வாகி உள்ளதாக கூறுகின்றனர்.

 

 

Next Story

'7.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லும்'-உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

'7.5 per cent internal allocation - High Court verdict!

 

கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

வரும் ஆண்டுகளிலும் இந்த உள் ஒதுக்கீடு தொடர்வதற்கான நிலை வகுத்துள்ள உயர்நீதிமன்றம், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இதனை மீண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் மூலமாக தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டு பின்னர் இதில் தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.