Advertisment

ஆப்பிளின் புதிய ஐஃபோன்- 13 சென்னையில் தயாராகிறது!

Apple's new iPhone 13 is ready in Chennai!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன்- 13 உற்பத்தி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியுள்ளது.

Advertisment

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து தரும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐஃபோன்- 13 உற்பத்தி செய்து தர தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஐஃபோன்களின் முன்னணி மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் ஃபாக்ஸ்கான் உள்பட மூன்று ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிள்களின் ஐஃபோன்கள் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஐஃபோன் 13 உற்பத்தி நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும், உலகத்துக்கும் மேக் இன் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக்கில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.

இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிள்களின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Foxconn Chennai Iphone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe