Appealing against Rs 2,000 special funding scheme

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல் நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த திடீர்திட்டத்திற்கு வரப்போகும் தேர்தல்தான் காரணம். தேர்தலை கருத்தில்கொண்டே இந்த சிறப்பு நிதி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் இந்த திட்டம் எந்த கட்சிக்குமான திட்டம் அல்ல என எடப்பாடி பதிலளித்திருந்தார். மேலும் இந்த தொகை இந்த மாத இறுதிக்குள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் தற்போது 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பர் இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார். தவறான மதிப்பீட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் முறையிட்டுள்ளார்.

இந்த முறையீடு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.