Advertisment

தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் - ஐயப்பன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

NN

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல்தொடர்ந்துகனமழை பெய்து வருகிறது. இதனால் கடலூரில் 12 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 70 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் நகரை ஒட்டி ஓடும் தென்பண்ணையாற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு மழைநீர் செல்கிறது.

Advertisment

தென்பெண்ணை ஆற்றின் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கும்தா மேடு என்ற புதுவை மாநில பகுதிக்குச் செல்ல தரைப்பாலம் உள்ளது.இந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதில் பொதுமக்கள் சென்றால் ஆபத்து ஏற்படும் எனப் பாலத்தை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்துதொடர் கனமழை காரணமாக ஆற்றில் அதிகமாகத்தண்ணீர் செல்வதை கடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஐயப்பன் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆற்றின் கரையோரம் குடியிருக்கும்பொதுமக்களிடம், ஆற்றில் அதிகம் தண்ணீர் வந்தால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அருகே உள்ள பாதுகாப்பான அரசு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினார். மேலும்அவர்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டாலும் உடனடியாகத்தொடர்புகொள்ள வேண்டும் எனவும் கூறினார். இவருடன் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Cuddalore rivers weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe