Appeal against Kurumurthy's speech about judges! - High Court instructs to file petition!

Advertisment

அரசியல்வாதிகள் காலில் நீதிபதிகள் விழுவதாக ‘துக்ளக்’ குருமூர்த்தி பேசியது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மூறையீடு செய்யப்பட்டதை,மனுவாகத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி ‘துக்ளக்’ பத்திரிகையின் 51வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ‘துக்ளக்’ பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி, ‘தற்போது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யார் மூலமாவது,யார் காலையோ பிடித்துத்தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

ஊழல் செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை. ஆகவே,தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால்,இதுபோன்று நடைபெறாது’ என குருமூர்த்தி பேசியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில்,வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், ‘துக்ளக்’ பத்திரிக்கையின் 51வது ஆண்டு விழாவில் நீதித்துறைக்கும்,நீதிபதிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முறையீடு செய்தார். முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மனுவாகதாக்கல் செய்தால்,இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.