/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/24_63.jpg)
தருமபுரி மாவட்டம் பொன்னாகரம் அருகே ஒகேனக்கல் சாலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடன் வந்தவரை வீடியோ எடுக்கச்சொல்லிவிட்டு, ஓரமாக நின்றிருந்த காட்டு யானை முன் சென்று இரு கைகளைத்தூக்கி கையெடுத்துக் கும்பிடுகிறார். மனிதர் திடீரென கைகளைத்தூக்கியதைக் கண்டதும் பயந்த யானை சில அடிகள் பின்னால் செல்கிறது.
பின் மீண்டும் வீடியோ எடுப்பவரை நோக்கி சில அடிகள் வரும் அவர், மீண்டும் அப்படியே வீடியோவை எடுக்கச் சொல்லி மீண்டும் யானையின் அருகே சென்று இரு கைகளையும் தூக்கி யானையை மறித்து நிற்பது போல் போஸ் கொடுக்கிறார். நல்வாய்ப்பாக யானை அவரை தாக்கவோ அவரை துரத்தவோ முற்படவில்லை. தொடர்ந்து யானை இருந்த பக்கம் தரையைத்தொட்டு வணங்கி மீண்டும் ஒருமுறை யானையை வணங்கிவிட்டு வருகிறார்.
சாலையின் இருபுறமும் கார்களும் சுற்றுலா வாகனங்களும் சென்ற வண்ணம் உள்ளது. இருந்த போதும், யானை சாலையின் ஓரம் நின்று கொண்டே இருந்தது. தனது செயலை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு யானையின் முன் மீசைக்காரர் செய்த செயல் இணையத்தில் வைரலாகிறது. அவர் மது அருந்தி இருக்கலாம் என இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)