Advertisment

''இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம்''-மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை!

mobile

இணையவழி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுவகையான மோசடி இணையதளத்தில்நடைபெற்று வருவதாக பொதுமக்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பார்ட் டைம் வேலை செய்து சம்பாதிக்கலாம் எனக் கூறி இந்த புதிய வகை மோசடி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

எஸ்.எம்.எஸ் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்தவுடன் ஒரு ஆப் போனில் டவுன்லோட் ஆகும்.அந்த ஆப் டவுன்லோட் ஆனவுடன் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் அறிவுரையை மோசடி நபர்கள் தருகிறார்கள். அந்த ஆப்பில் இணைந்தவுடன் போனஸ் தொகையாக 101 ரூபாய் பயனாளிகள் கணக்கிற்கு வந்துள்ளதாக காட்டப்படுகிறது. இறுதியாக போனஸ் தொகை வந்தவுடன் செயலியில் இருந்து ஒரு பொருளை வாங்கி விக்குமாறு கூறுவார்கள்.அந்தப் பொருளை வாங்க வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்புமாறு கூறி நூதன மோசடி நடப்பதாக கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். ஹனி, மேக்கிங் என்ற பெயரில் வரும் செயலியை டவுன்லோட் செய்வதை கைவிட வேண்டும் என எச்சரிக்கும் போலீசார், இதுபோன்ற மோசடி நபர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும்தெரிவித்துள்ளனர்.

Advertisment

warns police onlinebusiness
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe