
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில்அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை. வழக்கமான ரெகுலர் செக்கப்பிற்காக மட்டுமே மருத்துவமனைக்குச்சென்றுள்ளார் என சி.வி. சண்முகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow Us