சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வலது காலில் பொறுத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பி அகற்றப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருக்கு இன்று (22.11.2019) காலை நடைபெற்ற அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது. அவர் தற்பொழுது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்றார். கமல்ஹாசன் நலமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

apollo hospital treatment actor kamal hassan makkal needhi maiam press release

இதனிடையே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் கமல்ஹாசனை, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

Advertisment