மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். ஏற்கனவே உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆஜாராகி விளக்கமளித்தனர். அதோடு அப்போலோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ, சாந்தாராம் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த நிலையில் இன்று அப்போலோ மருத்துவர் ஷில்பா மற்றும் அப்போலோ மருத்துவமனையின் செவிலியர் ஹெலனா ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.