சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஏ.பி.சாஹிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த தஹில் ரமாணி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக வினீத் கோத்தாரி உள்ள நிலையில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்து தற்போது அறிவித்துள்ளது.