Advertisment

'யார் வேண்டுமானாலும் அதிமுகவுடன் கைகோர்க்கலாம்'-செங்கோட்டையன் பேச்சு 

nn

கடந்த 05/11/2024 சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மளிகையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரையிலான அனைத்து பதவிகளுக்கும் விரைவில் உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதேபோல் முக்கிய அறிவுறுத்தலாக திமுக, பாஜகவை தவிர மற்ற எவரையும் விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை எதிரிகளாக தீர்மானித்துப் பேசிய நிலையில் அதிமுகவையும், காங்கிரஸையும் விமர்சிக்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. பல்வேறு அரசியல் நோக்கர்களும் இது குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

அதேநேரம் மா.செ கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் திமுக, பாஜக தவிர மற்றவரை அதிமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 'ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே விமர்சித்துப் பேச வேண்டும்; அதிமுக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையலாம்' என பேசியுள்ளார்.

admk politics sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe