Advertisment

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள்- வியக்கவைக்கும் வெம்பக்கோட்டை!

சிவகாசி அருகிலுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்பது நாட்கள் அகழ்வாராய்ச்சி பணிகளின் முடிவில் சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லாலான எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த தொன்மையான மனிதர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக, தற்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடந்த முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் 3254 தொன்மையான பொருட்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment
tamil culture excavation Sivakasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe