Advertisment

கமலுக்கு முன்ஜாமீன்... நீதிமன்றம் உத்தரவு!

அரவக்குறிச்சியில் நடந்ததேர்தல் பிரச்சாரத்தில்முன்சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து,அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசன்கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில் கமல்மீது பல்வேறு இடங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவரக்குறிச்சியிலும்இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

   anticipatory bail to kamal... court order!

அதனையடுத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகும் கூடதிருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன்பிரச்சாரம் மேற்கொண்டபோதுகூடதான் கூறிய கருத்து சரித்திர உண்மை என கமல் கூறியிருந்தார்.

Advertisment

இந்த சர்ச்சை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை அவரச வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த மனு இன்றுநீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்,மாநில அமைச்சர் ஒருவர்தனது நாக்கை அறுத்து விட வேண்டும் என வெளிப்படையாக பேசியுள்ளார். எனவே முன்ஜாமீன் வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்,பொதுவாக முன்ஜாமீன் வழங்கும்போது என்னென்ன நிபந்தனைகள் பொருந்துமோ அந்த நிபந்தனைகள் கமலுக்கு பொருந்தும் என முன்ஜாமீன் வழங்கி வழக்கை முடித்துவைத்துள்ளது நீதிமன்றம்.

மேலும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டநீதிமன்றத்தில் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்திரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை கொடுத்து முன்ஜாமீனை பெற்றுக்கொள்ளலாம் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.

bail highcourt kamalhaasan Makkal needhi maiam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe