தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போர் - 50 பேர் பேர் கைது

avs

உச்சநீதிமன்றத் தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தி வட மாநிலங்களில் போராடிய தலித்துகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக அரசுகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

வன்கொடுமை தடுப்பச் சட்டம் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தி வடமாநிலங்களில் தலித்துகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய கொடூரமான அடக்குமுறையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமையன்று சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு முன்னணியின் மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், பொருளாளர் ஏ.கணேசன், திராவிட மக்கள் இயக்கம் சார்பில் க.சதாசிவம், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மநரில துணைத் தலைவர் கலைமுரசு, மாவட்டச் செயலாளர் வெ.ம.விடுதலைக்கனல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை. நாராயணன், தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் கவிபாலா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 20 பெண்கள் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

The anti-untouwechable front picket battle condemned the assault on Dalits
இதையும் படியுங்கள்
Subscribe