Advertisment

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லட்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை! 

 anti-corruption officers raid places owned by former minister Thangamani!

Advertisment

தமிழ்நாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வரின் உதவியாளர்கள் என வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பலர் வருமானவரித்துறையினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

அந்தவகையில், தற்போது கண்காணிப்பு வளையத்தில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. ஈரோடு, நாமக்கல், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் என 69 இடங்களில் இன்று (15.12.2021) காலை 6 மணி துவங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம்சோதனை நடத்திவருகின்றனர்.

thangamani
இதையும் படியுங்கள்
Subscribe