Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை... ஊழியர்கள், அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு..!

Anti corruption officers inquiry at annamalai university

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு கட்டுப்பாட்டுக்கு வரும் முன் 2008 - 2012 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பணப் பரிமாற்றம், பணி நியமனம், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்பு சேர்க்கை உள்பட பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமாக, தமிழக அரசுக்கு வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், மீண்டும் சென்னையிலிருந்து செவ்வாய்க் கிழமையன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பல்கலைகழகத்தில் பல்வேறு பணிப் பிரிவு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பழைய ஆவணங்களை எடுத்து விசாரணை நடத்தியதால், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அலுவலர்கள் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

Annamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe