புதுக்கோட்டை அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! 

Anti-corruption department raids Pudukkottai government official's house

விழுப்புரம் மாவட்ட வனத் தோட்டக் கழகம் மண்டல மேலாளராக இருப்பவர் நேசமணி. இவருக்கு புதுக்கோட்டை பெக்சல் நகரில் வீடு உள்ளது. இன்று (12.10.2021) காலை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவர்மன் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்திவருகின்றனர்.

Anti-corruption department raids Pudukkottai government official's house

காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தற்போதுவரை நடைபெற்றுவருகிறது. மாலைவரை நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் விழுப்புரம் மாவட்ட வனத் தோட்டக் கழகம் மண்டல மேலாளராக பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று விழுப்புரத்தில் உள்ள அவரது அலுவலக குடியிருப்பில் சோதனை நடத்தி ரொக்கப்பணம் ரூ. 36 லட்சம் மற்றும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இன்று புதுக்கோட்டையில் பெக்சல் நகரில் உள்ள நேசமணியின் சொந்த வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe