Advertisment

தஞ்சை,திருவாரூரில் அரசு அதிகாரிகள் வீடுகளில் திடீர் ரெய்டு 

Anti-corruption department raids the houses of government officials in Thiruvarur, Thanjavur

தஞ்சாவூர், திருவாரூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்டவற்றில் நடைபெற்ற முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் யார்; என்னென்ன முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பதை கண்டறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றிய மீனாட்சி, கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி மற்றும் கிராமநிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் வீட்டிலும், நெடுஞ்சாலை துறையில் டி.ஆர்.ஓ கேட்டகிரியில் இருக்கக்கூடிய தஞ்சையை சேர்ந்த மணிமேகலை என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

raid Thanjai Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe