சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ரெயிலடி) வளாகத்தில் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் மற்றும் இ.பி.எஃப், பி.எஃப் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வியாழக்கிழமை மாலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலக கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் உதவியாளர் சந்திரசேகர் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.