ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

11:04 AM Sep 13, 2022 | ArunPrakash


ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுமார் 7 ஆண்டுகள் வரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் விராலிமலை விஜயபாஸ்கர். கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரத்துடன் கோலோச்சி வந்த விஜயபாஸ்கர் அதீத வளர்ச்சி அடைந்தவர். அடுத்தடுத்து கல்வி நிறுவனங்கள் கனிமங்கள் வெட்டி எடுப்பது என வேகமாக வளர்ந்த அவர் ஆட்சியில் இருக்கும் போதே குட்கா வழக்கு, ஆர்.கே. நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா என அடுத்தடுத்த சோதனைகளில் சிக்கியிருந்தார்.

இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த சில வழக்குகளில் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு திருவேங்கைவாசல் உள்ளிட்ட விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரிகள், வீடுகள், அலுவலகங்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளானது.

இந்நிலையில், இதே போன்று இன்று இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ வீட்டில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் 7 பேர் அதிகாலையில் இருந்து சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடாக சான்றுகள் வழங்கியதாக கூறி இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சோதனை நேரத்தில் விஜயபாஸ்கர் சென்னையில் உள்ள நிலையில், இலுப்பூர் வீட்டில் அவரது தந்தை சின்னத்தம்பி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். தகவல் பரவியதும் வழக்கம் போல விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT