Advertisment

அதிமுக ஒப்பந்தக்காரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 

Advertisment

Anti-corruption department probes ADMK contractor's house

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எல்லாமுமாக இருந்து அரசு ஒப்பந்தங்கள் அதிகமாக எடுத்துகோடிக் கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டவர் புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல். புதுக்கோட்டை உள்பட பல ஊர்களில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பழனிவேல் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு சோதனைசெய்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து தற்போது தர்மபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீட்டிலும் அங்கு கொரோனா காலகட்டத்தில் பிளிச்சிங் பவுடர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அதன் ஒப்பந்தக்காரரான கடுக்காக்காடு பழனிவேல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Anti-corruption department probes ADMK contractor's house

இதனைத் தொடர்ந்து அவரது சகோதரரும் பாஜக பிரமுகருமானவர் வீட்டிலும் சோதனைநடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தயாராகி வருகின்றனர்.

admk velumani
இதையும் படியுங்கள்
Subscribe