Anti-corruption check at Avin's office

Advertisment

கோவை மாவட்டம் ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.8.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை பச்சாப்பாளையம் பகுதியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. இங்கு சீனியர் பேக்டரி உதவியாளராக பணியாற்றிவரும் கிருஷ்ணமூர்த்தி, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆவின் அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், ரூ.8.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.