Advertisment

சிறப்பு துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! 

Anti-bribery raid at ADMK ex-Korata's cousin's house

Advertisment

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு துணை ஆட்சியராகப் பணியாற்றிவந்தவர் பவானி.

இவர், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் பவானிபணியாற்றிய காலகட்டத்தில், அளவுக்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், அவர் மீது வேறு பல புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் இன்று (30.11.2021) லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன்படி, திருச்சி மாம்பழ சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பள்ளி உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe