anti-bribery department trichy government office

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை பலரும் சென்று சந்தித்து அவர்களுக்குப் பரிசு பொருட்களை வழங்கி வரும் பழக்கம் நடைமுறையிலிருந்து வருகிறது. இருப்பினும் இதுபோன்ற சமயங்களில் அதிகாரிகள் கையூட்டு பெறுவதும் அதிகம் என்பதால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சர்ப்ரைஸ் விசிட் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்தாண்டு தீபாவளி நெருங்கி வரும் நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை செய்தனர். அதன் ஒருபகுதியாக திருச்சி குடிசை மாற்று வாரியத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் அதிரடியாகச் சோதனை செய்தனர்.

Advertisment

இந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிர்வாக அதிகாரி மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் மீது பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். அரசு ஒதுக்கும் வீடுகளை பெறுவதற்கு லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரையடுத்து இன்று சோதனை செய்ததில் கணக்கில் வராத 58 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.