Advertisment

பரிதாபமாகப் பிரிந்த உயிர்; உதவி செய்ய வந்தவருக்கு நேர்ந்த துயரம்

Another youth who went to trap the youth passed away in a road accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிஅடுத்த ஆலங்காயம் அருகே உள்ள மந்தார குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினித் (19) இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்கள் 20 பேருடன் கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்தனர். வினித் தனது உறவினர் பிரகாஷ் (21) என்பவரை தனதுஇரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுவாணியம்பாடியில்விடுமாறு கேட்டுள்ளார். இருவரும்வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். இரு சக்கர வாகனத்தைப் பிரகாஷ் ஒட்டி சென்றுள்ளார்.

Advertisment

அப்போது வாணியம்பாடி அடுத்த பெரியார் நகர் அருகே உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம்கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற கல்லூரி மாணவர் வினித் படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தரவர்கள் ஓடிவந்து முதலுதவி செய்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து படுகாயம் அடைந்த வினித்தை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த இளைஞர் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

kodaikkanal police vaniyambadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe