
தமிழ்நாட்டில் தளர்வுகளற்றமுழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளதாகவும், எனவே தமிழ்நாட்டில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை (05.06.2021) வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு இருக்கும். இருப்பினும் பொது போக்குவரத்துக்குத் தமிழ்நாடு முழுவதும் அனுமதி இருக்காது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us